இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்று ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால் கஸ்தூரி, சேரன் இவர்கள் இருவரில் சேரன் வெளியேறுவதற்கு வாய்ப்பில்லை. சேரனிற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர். கஸ்தூரி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியாகியுள்ளாராம். இதனை நமக்கு நம்ப தகுந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கஸ்தூரி வீட்டைவிட்டு வெளியேறியபின் கஸ்தூரியிடம் கமல் அவர்கள் சீக்ரெட் ரூமிற்கு போகிறீர்களா என்று கேட்டதற்கு கஸ்தூரி மறுத்துவிட்டாராம். என்னதான் இவ்வளவு இறங்கி வந்து கேட்டுமே கஸ்தூரி போக
பிடிக்கவில்லை என்றால் அவரால் அங்கு இருக்க முடியவில்லை அதுமட்டுமல்லாமல் அங்குள்ள பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இனி யார் அடுத்த டார்கெட் என்று வரும் நாட்களில் தெரியவரும்.
