உலகையே இன்று இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு மிகப் பெரிய சாதனை செய்து, அதை நூலிழையில் தவற விட்டதால், கண்னீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால், நிலவுக்கு அருகே 2 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றபோது, அந்த லேண்டரின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை விக்ரம் இழந்தது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரோவின் தலைவர் சிவன் மிகுந்த வேதனையடைந்தார்.

அப்போது அவரை பார்க்க வந்த பிரதமர் மோடியின் கண்கலங்கி வேதனையடைந்தார். அவரை மோடி தேற்றியதுடன், இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது என்று ஆறுதல் கூறினார். அதன் பின் சிவன், அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிலவில் லேண்டர் விக்ரம் எங்கிருக்கிறது என்பது குறித்து துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்படி விஞ்ஞானித்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் சிவனைப் பற்றி

அவரிடன் உறவினரும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான ரமேஷ் கூறுகையில், தனது தாய், தந்தை இறந்தபோதுகூட வருத்தப்பட்டாரே தவிர, கண்ணீர் வரும் அளவுக்கு சிவன் அழுதுவிடவில்லை. ஆனால் சந்திரயான் 2 முழு வெற்றி அடையவில்லை என்று சிவன் அழுவதை பார்த்தபோது மனம் கலங்கினோம்.
தாயார் இறந்தபோது, இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு சிவன் சொந்த ஊர் வந்தார். தாயின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், வீட்டுக்கு வந்தவுடன் இ்ஸ்ரோவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்த உடனே அவர் பணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
