பிரபல திரைப்பட நடிகரான நாகர்ஜுனா வீட்டில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது யார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் நாகர்ஜுன். இவருக்கு தெலங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிகுடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பில் பண்ணை வீடு உள்ளது. இங்கு விவசாய பணிகளுக்காக சென்ற ஆட்கள், ஒரு மாதிரி துர்நாற்றம் வீசுவதாக நாகர்ஜுனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், அங்கிருந்த பழைய அறையை திறந்து பார்த்த போது, சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நடிகரின் பண்ணை வீட்டில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால், ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருந்தனர். நாகர்ஜுன் இதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். அதன் பின் பொலிசார் அங்கு நடத்திய சோதனையில், அங்கு கிடந்த ஆதார் கார்டை வைத்து, அது பாப்பிரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த சக்காலி பாண்டு (30) என்பவரது உடல் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும் சகோதரரின் இறப்பு காரணமாக கவலையில் இருந்த அவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்துகொண்டதாகவும்செய்துகொண்டதாகவும் அவரது பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், எங்கு தற்கொலை செய்தார் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது பொலிசில் நாங்கள் இது குறித்து புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பொலிசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
