கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு முதுகு, கை விரல்களில் தாக்கப்பட்ட வடுக்களுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் பொலிஸ் புகார் அளித்தார். பொலிசார் விசாரணையில் மாணவி பெத்தேல்புரத்தைச் சேர்ந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகவும் விசாரித்ததில் மாணவி உடல் வலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆசிரியைகள் பரிசோதித்து பார்த்ததில் மாணவியின் முதுகில் பட்டை பட்டையாகவும், கையிலும் தழும்புகள் இருந்ததை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி டியூசன் ஆசிரியை தாக்கியதாக கூறினார். இதையடுத்து ஆசிரியை ஹெசிமோளிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின அவர் அளித்த வாக்குமூலத்தில் மாணவி மதிப்பெண்கள் குறைவாக பெறுவதாகவும் அவரை படிக்க வைப்பதற்காக கரண்டி மற்றும் பிரம்பால் தாக்கியதாகவும்

அதை மறைக்க மாணவியை வீட்டுக்கு அனுப்பாமல் தனது வீட்டிலேயே தங்க வைத்து கொண்டதாகவும் கூறினார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் இரவு படிக்க வைத்து காலையில் தானே பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும்
ஹெசிமோள் கூறியுள்ளது தெரியவந்தது மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜெசிமோள் மீது பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
