பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நாளையுடன் யார் வெற்றியாளர் என்பது மக்களுக்கு தெரிந்து விடும். இதுதான் கடைசி வாரம் என்பதால் இப்போதே மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நிலவரப்படி

முகேன் முதலிடத்திலும், லொஸ்லியா இரண்டாவது இடத்திலும், சாண்டி மூன்றாவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரினும் உள்ளனர். தற்போது நிலவரப்படி முகேன் 43% சதவிகித வாக்குகளும், லொஸ்லியா 30% சதவிகித வாக்குகளும், சாண்டி 23% சதவிகித வாக்குகளும், ஷெரின் 6% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் சாண்டி டைட்டில் வின்னர் போட்டியில் கடுமையான போட்டியாளராக இருப்பார் அல்லது இரண்டாவது இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவரப்படி சாண்டியை பின்னுக்கு தள்ளி லொஸ்லியா சைலண்ட்டாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது வரை முகேன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இன்னும் ஒரு நாள் இருப்பதால் இரண்டாவது, மூன்றாவது நிலையில் மாற்றம் வந்தாலும் வரலாம் என்று கூறிவருகின்றனர்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை யார் வெற்றியாளர் என்று தெரியவரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் கமல் செம்ம அழகாக கதைத்துள்ளார். ஐயய்யோ 105 நாட்கள் முடிந்துவிட்டதே.. இன்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டுமே… என்று கவலை வேண்டாம். தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம். பின்பு கவலைப்பட்டுக்கொள்ளலாம் என்று அடுத்த சீசன் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
#Day104 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/OGD2iRpvjD
— Vijay Television (@vijaytelevision) October 5, 2019