கிரான்ட் பினாலே மேடையில் இலங்கை தர்ஷனுக்கு கமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரபல டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான எபிசோடு நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில்,  தர்ஷன், விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தில் தர்ஷன் நடிப்பது தொடர்பாக கமல் அறிவித்ததாக கூறப்படுகிறது. 90 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த தர்ஷன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக தர்ஷன் வெளியேற்றப்பட்ட பின்னர் லிப்ரா நிறுவனம்

தர்ஷனுக்கு பட வாய்ப்பை அறிவித்தது. இந்நிலையில் கமலும் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.