நகைச்சுவை நடிகர் ராமரின் குடும்பமா இது? வாழ்க்கையையே புரட்டி போட்ட பிரபல தொலைக்காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக இருக்கும் ராமரை இன்று சின்ன குழந்தைக்கு கூட பிடிக்கும். அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளார். ராமர் 2007இல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு ஆடிஷனில் கலந்து கொண்டவர். ராமருடன் ரோபோ ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ஒரே நேரத்தில் தான் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த விஷயம் பல ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியாக இருந்தது. ராமர் அப்போது SEMI FINALS ல் எலிமினேட் செய்யப்பட்டதால் அவரது முகம் ரசிகர்கள் மனதில் பெரிதாக பதியவில்லை.

இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என முனைப்புடன் விடாமல் முயற்சி செய்துள்ளார். அதன்பிறகு என்னமா இப்படி பன்றீங்களேமா… என்ற ஒரு எபிசோடு அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக உறுதுணையாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.
அன்றிலிருந்து பெண் வேடம் என்றாலும் அதை தவிர்க்காமல் பல முறை பெண் உடை அணிந்து மக்களை சிரிக்க வைத்துள்ளார். அப்படி செய்யும் போது தான் ஆத்தாடி என்ன உடம்பீ….. Remix பாடல் மாபெரும் ஹிட் ஆனது.

கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வையாளர்கள் அந்த காணொளியை பார்த்து ரசித்திருந்தனர். அதன் பிறகு ராமர் வரிசையாக ரீமிக்ஸ் பாடல்களை ரிலீஸ் செய்து வந்தார். அப்படி அவர் வெளியிட்ட ரீமிக்ஸ் பாடல்கள் அனைத்துமே ரசிகர் மத்தியில் தீயாய் பரவியது. ஒருகட்டத்தில் ராமர் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் மளமளவென்று குவிய ஆரம்பித்த போது தான், அவருக்கு படைப்பாளன் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நடிகராக இருந்த ராமர் அன்று முதல் ஹீரோவாக மாறினார். அதன் பிறகு சகல vs ரகள என்கிற கேம் ஷோவை நடத்த ஆரம்பித்தார் ராமர். அன்றுமுதல் இன்று வரை ராமருக்கு வெற்றி வந்தவண்ணம் இருக்கின்றது.

இதேவேளை, ராமர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மதுரை மேலூர் தான். அங்கு தான் ராமர் தனது BBA பட்டத்தை படித்து முடித்துள்ளார். ராமருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். அதில் முதல் குழந்தை பெயர் அயிஸ்வர்யா, மற்றும் இரண்டாம் பெண் குழந்தை பெயர் யமுனா மற்றும் கடைக்குட்டியின் பெயர் ஹரிபிரனாவ். ராமர் படித்தது BBA வாக இருந்தாலும், ஆர்வம் முழுவதும் நடிப்புத்துறையில் தானாம்.