தனது வித்தியாசமான சிரிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? வைரலாகும் புகைப்படம்

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. வித்தியாசமான தனது சிரிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் குமரிமுத்து கடந்த 2016-ல் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர் மரணமடைந்தால் அங்கு பிரபல இயக்குனர் சென்ற போது குமரிமுத்து கல்லறையை பார்த்துள்ளார். அதில் வித்தியாசமான வாசகம் எழுதியிருந்ததையடுத்து போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். இது குறித்த அவர் பதிவில், குமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு

It is the time for the God …to enjoy his laughter (எங்களை தேவையான அளவு சிரிக்க வைச்சுட்டாரு…ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த கற்பனை திறன் வியக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.