சுர்ஜித் மீட்பு பணிக்கு அருகில் உள்ள கிணற்றில் அதிகாரிகள் நடத்திய ஆய்வு- அதன் மூலம் தெரிந்தது என்ன?

சுர்ஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்துளை கிணற்றின் அருகில் 8மீற்றர் தூரத்தில் உள்ள கிணற்றில் முழுவதும் பாறைகள் மட்டும் என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சுர்ஜித்தை மீட்க அதிகாரிகள் பலகட்ட முற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 7:05 முதல் துளையிடும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. அதில், முதலில் 1 அரை மணி நேரத்தில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்றரை நாளை எட்ட உள்ளது. இதற்கான காரணம் அப்பகுதியில் உள்ள கடினமான பாறைகள்தான். அந்த பாறைகளை துளையிடுவதிலேயே பல சிரமங்கள் சந்தித்ததால் தொடர்ந்து பணிகள் தடைபட்டு வருகின்றது.

குறிப்பாக முதல் 5அடிகள் வேகமாக துளையிடப்பட்டது. அதன்பின் 17அடிவரை சற்று கடினமாக இருந்து. ஆனால் அதன்பின் ஒவ்வொரு அடிக்கும் பலமணி நேரம் செலவிடப்படவேண்டியிருந்தது. இதனால், அதுவரை ரிக் இயந்திரம் மூலம் துளையிட்டுவந்த பணிகள் மாற்றப்பட்டு, போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் துவங்கியது. அந்த பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றது. தற்போது போர்வெல் மூலம் 65 அடியில் 3துளைகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 3 துளைகளிட்டு 6துளைகளையும் இணைக்கவே திட்டமிடப்பட்டது.

அதன்படி துழைகள் இடப்பட்டு தற்போது அந்த துழைகளை இணைக்கும் பணிகள் ரிக் இயந்திரம் மூலம் நடைபெற்று வருகின்றது. எனினும் அதன் பணி விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக

அருகில் 8மீற்றர் தூரத்தில் இருந்த கிணற்றை ஆய்வு செய்த பொலிசார்  60அடிக்கு மேல் ஆழம் கொண்ட அந்த கிணறு முழுவதும் பாறைகள் மட்டும் இருப்பதை கண்டறிந்துள்ளனர். எனவே மேலும், தொடரும் பணிகள் கடினமாக இருக்கலாம் என்று தெரிகிறது.