சாமியார் நித்தியானந்தா எந்த நாட்டுக்கு தப்பி சென்றார்? அவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்த சிறுமி

சாமியார் நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட சிறுமி அவர் குறித்து அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள ஹத்திஜன் பகுதியில் அமைந்துள்ளது ஆசிரமம் நேரடியாக நித்யானந்தாவால் நிர்வகிக்கப்படும் நிலையில் இங்கு 50 க்கும் அதிகமான குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துது. நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா சாமியாருக்கு எதிராக புகார் குண்டைத்தூக்கி போட்டுள்ளார். தனது 3 மகள்களில் இருவரை மீட்டுள்ள நிலையில், ஒரு மகளை நித்யானந்தா, அவரது ஆசிரமவாசிகள் கடத்திவிட்டதாக புகார் அளித்தார்.

இதையடுத்து ஆசிரமத்தில் பொலிசார் சோதனை செய்தும் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சர்மாவின் மகள் ரூபத்தில் இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு போன் மூலம் பேசிய சர்மாவின் மகள்களில் ஒருவர், ஆசிரமத்திற்குள் சிறுமிகள் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அதாவது கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்களை நித்தியானந்தா பேசவைத்ததாகவும் அச்சிறுமி பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆசிரமத்தில் வசித்துவந்த தனக்கே, தனது மகளின் நிலை குறித்த தகவலை சொல்லவில்லை என்று சொல்லும் சர்மா, நித்யானந்தாவுக்கு தெரியாமல் மடத்திற்குள் எதுவும் நடக்காது என்கிறார். இதனிடையில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ள நிலையில்

அவர் ஈக்வேடார் நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார் என மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தினமும் யூடியூப் மூலம் தனது பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றுகிறார் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் சர்மாவின் இன்னொரு மகள் லோபா முத்ராவின் நிலை என்ன என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை.