இந்த சீசன் சூப்பர் சிங்கர் தொடரில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாடகர்களுள் விக்ரமும் ஒருவர். அந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான காட்சிகள் விக்ரமை மையமாக வைத்தே தொகுக்கப்பட்டன என்றும் கூறலாம். இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.

எடுத்துக்காட்டாக ஒவ்வொரு வாரமும் ஒரு பெண் விக்ரமுக்கு காதல் கடிதம் எழுதுவது போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் இவர் இந்த சீசனில் 2-வது இடத்தை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே அந்த சீசனின் இறுதியில் உருவானது. இதனிடையே தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது இவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக

அந்த புகைப்படம் கூறுகிறது. இந்த திடீர் நிச்சயதார்த்தத்தை புகைப்படத்தின் மூலம் பார்க்க ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விக்ரம் மற்றும் அவருடைய மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் அதிர்ச்சியை தந்திருந்தாலும், மணமக்களை அவர்கள் வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.