43 வயதிலும் எம்புட்டு அழகு? ரஜினியின் படப்பிடிப்புக்கு விமானத்தில் பறந்த நடிகை மீனா… வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க!

சூப்பர் ரஜினிகாந்துடன் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜோடியாக நடித்த மீனா தற்போது மீண்டும் ரஜினியின் 168-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மீனா மட்டுமின்றி குஷ்புவும் நடிக்கவுள்ளார். நடிகை மீனா ரஜியுடன் எஜமான், வீரா, முத்து என்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக மீனா நடித்துள்ளார். பின்பு கடந்த 2008ம் ஆண்டில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் தற்போது தலைவரின் 168வது படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது தலைவர் படத்தின் படப்பிடிப்பிற்கு ஹைத்ராபாத் செல்வதற்காக விமானத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் 43 வயதிலும் என்ன அழகு? என்பதோடு, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.