நான் பாடி வெளிவந்த முதல் பாடல் `அந்நியன்’ படத்துல `ரண்டக்க ரண்டக்க’தான். சின்ன போர்ஷன்தான் பாடியிருப்பேன். அப்போ ஸ்கூல் படிச்சிகிட்டிருந்தேன்.சைந்தவி சின்ன வயசுல நான் சினிமாவுல பாடுவேன்னுலாம் நினைச்சதே இல்லை. என்னுடைய 14 வயசுலதான் பாடுறதை சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சேன். அப்படிப் பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிடுச்சு. தேவா சார் இசையமைத்த `உயிரெழுத்து’ங்கிற படத்துக்குத்தான் நான் முதன்முதலா பாடினேன். என்னை டிராக் பாடத்தான் முதல்ல கூப்பிட்டாங்க. வாய்ஸ் பிடிச்சதால அந்தப் படத்துலே மூணு பாட்டு பாட வெச்சாங்க.

முதன்முதலா ராஜா சார் இசையில நான் பாடினது `அஜந்தா’ங்கிற படத்துல. சின்ன போர்ஷன்தான். ரெக்கார்டிங் போகும்போது வியர்த்துக்கொட்டி, பயங்கர ஷிவர் ஆகிடுச்சு. நான் என்ன கரடியா, புலியா… பயப்படாம பாடு’னு சொன்னார். ஆனாலும், அந்தப் போர்ஷன் முழுக்கவே பயத்தோடதான் பாடினேன். அவருடைய காலகட்டத்துல நானும் ஒரு பாடகியா இருக்கிறதுல சந்தோஷம்.இளையராஜாவுடன் உண்மையைச் சொல்லணும்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, `மதராசப்பட்டினம்’ படத்துல விஜய் சார் நான் பாடினா நல்லா இருக்கும்னு விருப்பப்பட்டார். பாட்டும் நல்லா ஹிட்டாச்சு.

இப்படியே அடுத்தடுத்து அமைஞ்சிடுச்சு. ஜி.வி படத்துல நான் பாடும்போது ரொம்பவே பயமா இருக்கும். சரியா வரலைன்னா உடனே திட்டிடுவார். பலருக்கு எங்க ரெண்டு பேர் காம்பினேஷன் பிடிச்சிருக்கு, சிலருக்குப் பிடிக்கலை. ஜி.வியைப் பத்தி தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அவர் வொர்க் பண்ற எல்லாப் படங்களுக்கும் சீக்கிரமே டியூன் முடிச்சிடுவார். இது அவர்கூட வொர்க் பண்ற எல்லோருக்கும் தெரியும்.ஜி.விக்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ் இருக்காங்க. அவரை ரொம்பப் பிடிச்சவங்க சிலர் எனக்கே மெசேஜ் அனுப்புவாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. மெசேஜ்தானே பரவாயில்லைனு இருந்துடுவேன். இதை அடிக்கடி அவர்கிட்டே சொல்லிக் கிண்டல் பண்ணுவேன்.