மாணவர்களுக்கு முழு உடலையும் காட்டி பாடம் எடுத்து தன்னையே அர்ப்பணித்த ஆசிரியை..!! வைரலாகும் வீடியோ

ஸ்பெயின் நாட்டில் வெரோனிகா என்ற பள்ளி ஆசிரியை 8 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். உடற்கூறியல் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்து வரும் இவர், எளிய முறையில் புரிவதற்காக உடற்கூறியல் வரைபடம் கொண்ட ஆடையை அணிந்துகொண்டு உடல் பாகங்களில் எங்கெங்கே எந்தெந்த உறுப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவாக விளக்கும் வகையில் பாடம் எடுத்து வருகிறார்.  வெரோனிக்கா மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகியது. இவரின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு

அதிகப்படியான பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டு அரசு இவரை அழைத்து கௌரவிக்கவும் செய்திருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ