தமிழில் பாளையத்து அம்மன் படத்தில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி. இவர் அதிக மலையாள படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேல் சினி துறையில் இருந்து வருகிறார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரள மாநிலம் ஆகும். திவ்யா முறையாக பாரத நாட்டியம் கற்று கொண்டவர். மேலும் இவர் மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்று தரும் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் 2000 ஆம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு பின்பு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்பு
கடந்த ஆண்டு அருண்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர் 3 வது முறையாக கர்ப்பமாக உள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
