கடந்த 2017-ஆம் ஆண்டு கோலிவுட் திரையுலகினர்களின் முகத்திரையை கிழித்து வந்த பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது என்பதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் வெளியானது. பிறகு இவை சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது என்று கூறப்பட்டது.ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடல்களும் பாடியுள்ளார்.

அதுவும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார்.இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விலகி தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் தற்போது சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் சுச்சிலீக்ஸுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் எப்படி தனுஷ் மற்றும் அனிருத்தின் பெயர் சிக்கியது என்பது தெரியவில்லை.தேவையில்லாமல் இவர்களது பெயரை கெடுத்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் வெகுநாட்கள் ஆளே காணாமல் போன சுசித்ரா தற்போது மீண்டும் வந்துள்ளார்.சுச்சி குக் என்ற புதிய யூடியூப் சேனல் ஆரம்பித்த சுசித்ரா விரைவில் தனது பாடல் ஒன்று வெளியாகும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்தப் பாடல் வெளியாகியுள்ளது. ஐ டோன் நோ என்ற பாடலை சுசித்ரா மற்றும் ரஞ்சித் இணைந்து பாடியுள்ளனர். காதலை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பாடல் நன்றாக இருப்பதாகவும் சுசித்ரா குரலை வெகுநாட்கள் கழித்து கேட்பதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளனர்.