தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகை நடிகர்கள் சிலர் தவறான பாதையை தேடி போவது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது.. சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கடந்த 2006-ம் ஆண்டு தனது வீட்டில் கயிற்றில் தொங்கியபடி உயிரிழந்தார். இந்த வழக்கில் நடிகர் தேவ் ஆனந்த் கைது செய்ய பட்டார். இதையடுத்து, வைஷ்ணவியின் சின்னத்திரையில் அவருடன் பணியாற்றிய சக நடிகரான தேவ் ஆனந்துதான் காரணம் என வைஷ்ணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

புகாரில், `வைஷ்ணவியை, தேவ் ஆனந்த 2-வதாக திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், வைஷ்ணவி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார். இதனால், மனஉளைச்சல் அடைந்த தேவ் ஆனந்த் வைஷ்ணவியை தொடர்ந்து பின்சென்றுள்ளார். இதனாலே காரணமாகவே வைஷ்ணவி தவரான முடிவை எடுத்துகொண்டார்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தேவ் ஆனந்த். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 2011-ல் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தேவ் ஆனந்துக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனவே பல வருடங்களாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கு தற்போது முடிவிற்கு வந்துள்ளது என்று மக்களிடையில் சற்று முணுமுணுக்க பட்டு வருகிறது.