சமூகத்தில் நடக்க கூடிய அனைத்து பிரச்சனைக்கும் சமீபகாலமாக பெண்களின் உடை ஒரு காரணமாக இருக்கிறது என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இந்த பேச்சு எடுக்கப்படுகிறது. இந்நிலையில், டிக்டாக்கில் ஒரு பெண் ஒருவர் பெண்ணியம் என்பது என்னவென்றே

தெரியாதது போன்று அரைகுறை ஆடைகளை உடுத்துவது எனது உரிமை என்கிற மாதிரியான தோரணையில் பேசிய வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்து வந்தனர்.மேலும் பல்வேறு விதமான விமர்சனங்களை சந்தித்த இந்த வீடியோ அந்த பெண்ணை மிகவும் பாடாய் படுத்தியது.ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து பதிவுகள் போட்டார்.

இவ்வாறு இவரது பிரச்னைகளோரு முடிவுக்கு வந்தநிலையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளார் இவர்.இவர் நடிப்பில் வெளியாகி உள்ள ஜாடிக்கேத்த மூடி என்ற குறும்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த குறும்படத்திலும் இவர் டிக் டாக் வீடியோகளில் பண்ணுவது போல இதிலும் செய்திருக்கிறார். குறும்படத்தின் தொடக்கத்திலேயே இந்த காட்சிகள் வருகிறது.அப்போது இந்த குறும்படம் ட்ரெண்டாகி வருகிறது.