குழந்தை பிறக்கவேயில்லை..!! மோசமான இறுதி நாட்கள்..!! காமெடியில் நம்மை சிரிக்க வைத்த குள்ள நடிகர் தவக்களையின் பரிதாப மரணம்..!!

தமிழ் சினிமாவில் நம்மால் மறக்க இயலாத நபர்கள் பலர் உள்ளார்கள். அதா மிக முக்கியமான காரணம் அவர்களின் நடிப்பு திறமை தான் என்று கூறலாம். அந்த காலங்களில் நடித்த ஒரு சில நடிகர்கள் நம்மால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு சில நபர்களில் காமெடி நடிகர் தவக்களை தான். ஆம் 90 களில் காமெடி க்கு சற்றும் குறையாத வகையில் அல்லி தந்த தவக்களை நம்மள மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். குள்ளமாக இருந்தாலும் அவர் பண்ணும் அனைத்து பாடி ஸ்லாங்கும் நம்மை சிரிக்க வைக்கும் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமான தவக்களை ஆண்பாவம், கமலின் காக்கிச் சட்டை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் தவக்களை.

இவர் சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக கடந்த 2017ல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 43 ஆகும். அவரின் இறுதிச் சடங்கு சிம்பிளாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு.  அவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.