92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வாய்த்த வளர்ப்பு மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் கோட்ஸ், நகரை சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த சகோதரின் மகனான நிகோலஸ் வளர்த்துள்ளார். இந்நிலையில், 92 வயது மூதாட்டி மரிய மிக்கேலை சரியாக கவனிக்காததால் , கழிவறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி இரவில் குளிரில் இருந்துள்ளார்.

எனவே , அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினரின் நடவடிக்கையால் மூதாட்டியை க ரு ணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மேலும், சமூக நலத்துறை அளித்த புகாரின் பேரின், மூதாட்டியை சரியாக கவனிக்காததால் வளர்ப்பு மகன் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.