தமிழ் சினிமாவிற்கு பல புது புது நடிகர் நடிகைகள் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அக்காலத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தங்களை சினிமாவில் அடையாளம் காட்ட பல விதமான ரோல்களில் நடித்தார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவர்களுக்கு சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் ,தமிழ் சினிமாவில் ஐவரும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். நடிகர் விஷ்ணு சினிமாவில் தனக்கு என்ன வருமோ அந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பெரும்பாலும் இவரது படங்கள் காமெடிகள் நிறைந்ததாக இருக்கும். அண்மையில் மனைவியை விவாகரத்து செய்தது, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் வீட்டில் முடங்கியது என பல கஷ்டங்கள் அனுபவித்துள்ளார்.
#FIRteaser is going to touch 2 million soon…thank you all for the wonderful feedback frm all over…have gone through each and every tweet??? pic.twitter.com/WKkRx23Lj0
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) January 27, 2020
அதில் இருந்து வெளியே வர அவர் உடற்பயிற்சி மேற்கொண்டு புது ஆளாக மாறியுள்ளார். அண்மையில் விஷ்ணு நடித்த FIR பட டீஸர் வெளியானது, ரசிகர்களும் பேராதரவு கொடுத்துள்ளனர். டீஸர் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதால் விஷ்ணு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் முதன்முறையாக அவரது காதலி என்று கிசுகிசுக்கப்படும் ஜுவாலா கட்டாவும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த வீடியோ லட்சக்கணக்கான நபர்களால் பார்க்கப்பட்டும், ஷேர் செய்து வருகிறார்கள்.