தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பயங்கரமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சென்னையில் அதிகபட்சமாக 266 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக கடலூரில் இன்று ஒரே நாளில் 122 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்