நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி சோபனாவிற்கு மகனாக பிறந்த நடிகர் விஜய், கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மாஸ்டராக பெரும் சத்தத்துடன் பிகில் அடித்து வருகிறார். பல சோதனைகளை கடந்த இந்த சரித்திர நாயகன் தமிழ் சினிமாவின் சாதனை நாயகனாக மாறி உள்ளார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கிளின்டன் ரோச் டிசைனில் உருவான இந்த போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அவர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கும் காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது. இதுஒருபுறம் இருக்க விஜய் ரசிகர்கள் விஜய் குடும்பத்துடன் கேக் வெட்டுவது போன்ற புகைப்படத்தினை போட்டோஷாப் மூலம் மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
