பிரபல நடிகை வனிதா தனது காதலர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் வனிதாவின் வீட்டில் அட்டகாசமான தோரணையுடன் நடைபெற்றுள்ளது. பிக்பாஸின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களைக் கவர்ந்த வனிதாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம்.

இன்று தனது தாயின் திருமண நாள் என்பதால் தனது திருமணத்தினையும் இன்றே செய்ய வேண்டும் என்று கூறியதோடு, திருமணமும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. வனிதா திருமணம் இன்று கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்தது. இதில் வனிதாவிற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் பீட்டர் பால் குடும்பத்தினர் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இந்நிலையில் திருமணத்தில் வனிதாவின் மகள்கள் கலக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் மிகவும் சிம்பிளாக ஒரே மாதிரியான ஆடையணிந்து கேக் ஊட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் வனிதா திருமண கொடுத்ததில் வீடியோ பதிவு இதோ