பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா, தற்போது மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் எங்கு பாத்தாலும் இவரை பற்றி தான் செய்தி. கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்ற எடிட்டரை நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

23 வயதில் மூத்த மகனும் வயதுக்கு வந்த ஒரு மகள் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் தன்னை விவாகரத்து செய்யாமல் அவர் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து எலிசபெத்துக்கு ஆதரவாக you tube பிரபலமான சூர்யா தேவி,

என்பவரும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் கருத்து தெரிவித்தனர். சூர்யாதேவி வனிதாவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதனால் க டுப்பான நடிகை வனிதா,சூர்யா தேவி மற்றும் ரவீந்தர் மீது நேற்று முன்தினம் போலீஸில் புகார் அ ளித்தார். இந்நிலையில் இவர்களை கேலி செய்யும் விதமாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.