தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தல அஜித்தின் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தின் வேலைகளில் உடனேயே இறங்கினார். வலிமை ஃபஸ்ட் லுக் வரும் ஆயுதபூஜை ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் தனது படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

அஜித்துக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான் அனுஷ்கா அஜித் குமார். இவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் அனுஷ்கா அஜித் குமார் ‘பாஸ்கெட் பால்’ விளையாடும் வீடியோ ஒன்று முதன் முறையாக வெளியாகியுள்ளது. ஆம் இந்த வீடியோவில் 6ஆம் நம்பர் ஜெசியுடன் விளையாடுபவர் தான் அனுஷ்கா அஜித் குமார்.