தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்தவர் நடிகை சிம்ரன். நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒன்ஸ் மோர், விஐபி, கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, பிரியமானவளே என பல வெற்றி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

90களில் தல அஜித், பிரஷாந்த், விஜயகாந்த், கமல், ரஜினி மற்றும் தளபதி விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சிம்ரன். சமீபத்தில் கூட ஓடு ராஜா ஓடு, துப்பறிவாளன், சீமாராஜா, மற்றும் சென்ற வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தீபக் என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஆதீப், ஆதித் என இரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வருகின்றனர். இதோ..
