திருமணத்திற்கு பின்பு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை லைலா..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா..?

நடிகை லைலா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த லைலா இப்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய சினிமாவின் பொற்காலம் என அழைக்கப்படும் 90களில் அறிமுகமான வெகு சில திறமையான மற்றும் தனித்துவமான நடிகைகளில் நடிகை லைலாவும் ஒருவர்.

எப்பொழுதும் சிரித்த முகம் கன்னக்குழி அழகு துறுதுறுப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இன்றளவும் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாத உயரத்தை எட்டி இருக்கும் லைலா, மீண்டும் ரசிகர்களை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, முன்பு திரைப்படங்களில் பார்த்ததைப் போல கொஞ்சம் கூட மாறாமல் அதே இளமையுடன் இப்போதும் இருக்கும் லைலா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.