நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்..! என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க..??- இத, நாக சைதன்யா கூட நம்ப மாட்டார்..!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா திரைப்பட மூலம் அறிமுகமானார் நடிகை சமந்தா. இதே படம் தெலுங்கில் யே மாயா சேஸ்வே என்ற பெயரில் வெளிவந்தது அதே படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சமந்தா. தற்போது தமிழ், தெலுங்கு என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் கமிட் ஆகும் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது.

இதன் பின் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய இகா தான் இப்படம் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளிவந்தது. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். அவர் கல்யாணத்துக்கு பின்பு நடித்த படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

வெகுசிலருக்கு மட்டுமே அரிதாக இப்படியான வாய்ப்பு அமையும். அது சமந்தாவுக்கும் வாய்த்து இருக்கிறது. இந்நிலையில், சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளனர். அந்த கோவில் சிலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை சமந்தா என்று சொன்னால் நாக சைதன்யா கூட நம்ப மாட்டார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.