அட சீரியலில் குடும் பாங்கினியாக தோன்றும் நடிகை கிருத்திகா லட்டுவா இது..? – புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

“தேன் நிலவு” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கிருத்திகா லட்டு அவர்கள். இந்த தொடரைத் தொடர்ந்து “பொன்னூஞ்சல்” மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களின் மூலம் சிறந்து விளங்கினார். மேலும், சூப்பர் மாம் (Super Mom) என்ற ரியாலிட்டி ஷோவில், மகள் ஸ்ரீகாவுடன் இணைந்து கலந்து கொண்டார்.

மேலும் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 600028 II மற்றும் இனிமே இப்படித்தான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் கிருத்திகா லட்டு. சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்துவதை பார்த்து வருகிறோம். சினிமா மட்டுமில்லாமல், சீரியலிலும் ஹீரோயிங்களுக்கான போட்டி உள்ளது என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அந்த வகையில், நடிகை கிருத்திகா லட்டுவும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சிலபுகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்க சீரியலில் பால் வடியும் முகத்துடன் தோன்றும் நடிகை கிருத்திகா லட்டுவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…