தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர், என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீப காலமாக மக்களிடத்தில் அதிகமாக கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் இவருடைய அடுத்த படம் குறித்த update தான், அந்த வகையில் இவர் நடிப்பில் “வலிமை” படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது, என்ற தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் தல அஜித் தன் அடுத்தப்படத்தையும் இயக்குனர் வினோத்திற்கு தான் கொடுத்துள்ளார், என்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன, அதன் வேலைகளில் தற்போது பிஸியாகவுள்ளார். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, அஜித் சமீபத்தில் வெளியே சென்ற போது ரசிகருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் அஜித் உடல் எடை குறைத்து ஆளே செம்ம ஸ்லீம் ஆகியுள்ளது போல் தெரிகிறது. மேலும், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை…
