பார்த்திபனின் இரவின் நிழல்…. சிங்கிள் ஷாட்டுக்கு நடுவுல இவ்வளவு Fun இருக்கா?…. வைரலாகும் வீடியோ…..!!!

இன்றைய காலகட்டத்தில் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு கலைஞர்களும் கருதுகின்றனர். அதன்படி தான் பேசும் மேடைப்பேச்சுகளிலும் கூட அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசம் காட்டி அசத்துப்பவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இவரின் நடிப்பு மற்றும் இயக்கத்தை தாண்டி தமிழ் பேச்சுக்கு பலரும் அடிமை.

ஒரு சிறிய விஷயத்தை கூறினாலும் அதில் கொஞ்சம் சிரிப்பு நிறைய சிந்தனையை கலந்து தான் அவர் பேசுவார். அப்படிப்பட்டவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் இரவின் நிழல். இந்தத் திரைப்படம் மிகவும் அற்புதமான விமர்சனங்களை பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.இயக்குனர் பார்த்திபன் தனது நீண்ட கால உழைப்பை கொட்டி எடுத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

அதிலும் குறிப்பாக தனது வாழ்க்கையில் அதிகாலை காட்சியை பார்த்ததே இல்லை என்று உருகிப் பேசினார் பார்த்திபன். மேலும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பும் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் அருமையான படம் எனவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமாகும். இந்த சிங்கிள் ஷாட்டிற்கு நடுவில் படக்குழுவினர் செய்த Fun காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.