ஜூலை 28 முதல்…. டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் லெஜெண்ட் சரவணன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பிரபல தொழிலதிபரான சரவணன் சில வருடங்களுக்கு முன்பு விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இரண்டு கதாநாயகிகளுடன் அவர் நடித்த அந்த விளம்பர படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் விரைவில் சினிமாவில் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் அந்தச் செய்தியை அவர் உண்மையாகி உள்ளார். கடந்த வருடம் உல்லாசம் மற்றும் விசில் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்களான JD ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தில் இருந்தனர்.

அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹரிஷ் ஜெயராஜ் ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையாக ஊர்வசி ரௌட்டல இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க யாஷிகா ஆனந்த் ஒரு பாட்டிற்கு நடனமாடி இருக்கிறார். இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தீ லெஜன்ட் திரைப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை சரவணன் பான் இந்தியா அளவில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்களை போல லெஜன்ட் திரைப்படமும் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளதே இந்த படத்தின் மீது சரவணன் வைத்திருக்கும் நம்பிக்கையை குறிப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி பான் இந்திய படமாக பல மொழிகளில் வெளியாக உள்ளது.