“தளபதி விஜயுடன் விளம்பர படத்தில் நடித்தேன்”…. என்னிடம் அப்படி நடந்து கொண்டார்…. பிரபல நடிகை நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் திரையில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்து ஆக்ரோஷமாக வசனங்கள் பேசி நடிப்பதில் மிகவும் வல்லவர். ஆனால் திரைக்குப் பின்னால் விஜய் முற்றிலும் மாறுபட்ட மனிதராகவே இருக்கிறார். சிறிய புன்னகையோடு எப்போதும் அமைதியாக இருப்பார். அவரின் இந்த குணம் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது. இந்நிலையில் பாலிவுட் திரை உலகில் பிரபல நாயகியாக வலம் வரும் கத்ரீனா கைப் சமீபத்தில் பேட்டி ஒன்று அழைத்தார்.

அப்போது அவரிடம் தளபதி விஜய் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், விஜய்யுடன் நான் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளேன். அந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அப்போது நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் ஒரு ஷூ கால்கள் இருந்தன. ஆனால் அதனை நான் கவனிக்காமல் தொடர்ந்து எனது மொபைலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்த போது தான் எனக்குத் தெரிந்தது அருகில் நடிகர் விஜய் நின்று கொண்டிருந்தார். அவர் எனக்கு பாய் சொல்ல வந்திருக்கிறார். அப்போது நான் மொபைல் பார்த்துக் கொண்டே இருந்ததால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி விஜய் எனக்காக காத்திருந்தார். அந்த நிகழ்வை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் தளபதி விஜய் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.