பிக்பாஸ் சீசன் 6…. அதிரடியாக களமிறங்கும் 3 முக்கிய பிரபலங்கள்…. அவங்க யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!

விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் 6 ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த ராஜலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து தற்போது இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு மாடல் என மூன்று முக்கிய பிரபலங்கள் பெயர் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் கார்த்தி குமார், நடிகர் அஜ்மல் மற்றும் மொடல் அஜய் மெல்வின் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.