குரங்குகளுக்குள் கேங் வார்…. இரு அணிகளாக பிரிந்து அடித்துக் கொள்ளும் குரங்குகள்…. வைரலாகும் வீடியோ இதோ….!!!!!

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது குரங்குகள் செய்யும் சேட்டை, விளையாட்டு, சண்டை போன்ற வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அவ்வகையில் குரங்குகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஏராளமான குரங்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கின்றன. பின்னர் சத்தமிட்டபடி தொடர்ந்து தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன. இதனை பார்க்கும்போது அப்படியே மனிதர்களுக்குள் நடக்கும் கேங் வார் போலவே உள்ளது. அந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருவதால் அது தற்போது வைரலாகி வருகின்றது.