மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் இளைஞரை கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது இளம் பெண் ஒருவருக்கும் இளைஞருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஏதோ பேசிக்கொள்ள அந்தப் பெண் தான் ஸாரா பிராண்டின் டி-ஷர்ட் ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக கூறுகிறார். அதற்கு அந்த இளைஞர் டி-ஷர்ட் விலை 150 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை என கூற இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற அந்தப் பெண் இனத்தின் கன்னத்தில் ஓங்கி பலார் என்று அடிக்கிறார். ஆனால் அந்த இளைஞர் திரும்பத் திரும்ப ஏதோ கூற அதற்கு அந்த பெண் அடித்துக் கொண்டு இருக்கிறார். அதற்கு அந்த இளைஞரும் திரும்ப அடிக்கிறார். ஆனால் அங்கு என்ன நடக்கிறது ஏன் அடித்துக் கொள்கிறார்கள் என்று அருகில் உள்ளவர்கள் குழப்பத்தில் எதுவுமே கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ரயிலில் இருந்து இருவரும் இறங்கி செல்கின்றன. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4
— Mandar (@mandar199325) July 13, 2022