விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளனி பிரியங்கா. அவரைத் தெரியாதவர்கள் நிச்சயம் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இவர் பிக் பாஸ் சீசன் 5 மூலம் அனைவருக்கும் பிரபலமானார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜு டைட்டில் வின்னர் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து ஆடும் வீடியோ எப்போதும் வைரல் ஆகுவது வழக்கம்.

இந்நிலையில் ராஜு வூட்ல பார்ட்டி என்ற புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் தொகுப்பாளனி பிரியங்கா மற்றும் பிக் பாஸ் புகழ் ராஜு, விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த ப்ரோமோ அதிரடியாக வெளியாகி இருப்பதால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மிக விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாக உள்ளது.