தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். அவரின் மகன் வேதந்த் நீச்சல் போட்டியில் தற்போது சாதனை படைத்துள்ளார். ராக்கெட்டரி படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் மாதவனுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்ட அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் தனது மகன் நீச்சல் போட்டியில் சாதனை படைத்த போது எடுத்த வீடியோவை மாதவன் தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாதவனின் மகனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
Never say never . ????????????❤️❤️???????? National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️????????@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022