இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பு ஒன்றை மீட்பதற்கு தனது வீட்டை இடித்து ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள தொகானா என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகப்பாம்பு ஒன்று இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது. சுவர்களுக்கு நடுவே நாகப்பாம்பு இருந்ததால் அதனை மீட்க வீட்டின் ஒரு பகுதியின் சுவர் மற்றும் மேற்கூரையை உடைத்து பாம்பை ஒருவர் காப்பாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
The house was demolished to save the life of a snake trapped between two walls, see the spectacular #Video of the rescue#Snake #AnimalRescue pic.twitter.com/mULLURjirN
— India.com (@indiacom) July 18, 2022