சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடியாக நடித்த பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் ரக்ஷிதா தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது.

இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ரக்ஷிதா ஒரு இயக்குனரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தினேஷ் பிரபல ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில், என்னை விட தைரியசாலி தான் அவங்க. சமீபகாலமாக அசாதாரணமான நாட்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம். இணையத்தில் பரவும் செய்திகளை நான் புறம் தள்ளி விடுகிறேன்.

வெறும் காசுக்காகவும் லைக் வருவதற்காகவும் இப்படி செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கூறினார். மேலும் ரக்ஷிதா இரண்டாம் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தினேஷ், எங்கள் இருவருக்கும் ஆன இடைவேளியும் பிரிவும் தற்காலிகமானது தான். இடையில் ஏற்பட்ட சண்டையால் சிலர் தனித்தனியாக வாழ்வார்கள். அப்படித்தானே தவிர நாங்கள் சட்டபூர்வமாக பிரிவதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
