கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் 1967ஆம் ஆண்டு வெளியான இந்துலேகா திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். அதன் பிறகு மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி வந்த இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவரது உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் உடலை அரசு சார்பில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பழம்பெரும் நடிகரின் சடலம் அனாதையாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
