தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிகமாக வருமான வரி செலுத்திய நடிகர் என்பதற்கான விருது ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வருமான வரி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் தமிழகத்தில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரி சார்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விருது வழங்கி கௌரவித்தார். அப்போது ரஜினிகாந்த்திற்கு பதிலாக அவரின் மகள் சௌந்தர்யா அந்த விருதை பெற்றுக் கொண்டார்.
