“அம்மா பிறந்த நாளில் கூட இல்ல”… ஃமேலி ஃபோட்டோவில் மிஸ்ஸான தனுஷ்…. காரணம் என்ன தெரியுமா?…..!!!!!

தமிழ் சினிமாவில் சொல்லுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. நடிப்பு மட்டுமின்றி எழுத்து, இயக்கம் மற்றும் பாடல் என பன்முகத் திறமையுடன் தனுஷ் வலம் வருகிறார். இவர் சமீபத்தில் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் தாயாருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனுஷின் சகோதரிகள் தாய் வீட்டிற்கு வந்து அம்மாவின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை தனுஷின் சகோதரி விமலா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதில் கஸ்தூரிராஜா, அவரது மனைவி, செல்வராகவன் அவரது மனைவி ஆகியோர் உள்ள நிலையில் தனுஷ் மட்டும் இல்லை.

அந்த போட்டோ உடன் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள விமலா தனுசை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் தனுஷ் எங்கே என கேட்டு வருகிறார்கள். வாத்திபடத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தனுஷ் அதில் பங்கேற்று இருப்பதால் அம்மாவின் பிறந்தநாளில் அவருடன் இருக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.