“அதுக்கு நீயா பணம் கொடுத்த”…. உன்ன நெனச்சா அசிங்கமா இருக்கு…. கேலி செய்த பெண்ணை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு….!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.  அவ்வகையில் சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மார்டன் உடை அடைந்து புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதனைப் பார்த்த ரேகா என்பவர், அழகாக தான் இருக்கிறீர்கள்,ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும், உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்து கடுப்பான குஷ்பூ அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், நீங்கதான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்களை துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு என்று கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.