அம்மாடியோ…. உலகம் முழுவதும் இத்தனையா?…. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் “தி லெஜண்ட்”….. வேற லெவல்…..!!!!

ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள “தி லெஜன்ட்” படம் இன்று வெளியாகிறது. சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்த படத்தின் வெளிநாடுகளில் வெளியீடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியன ஐந்து மொழிகளிலும், உலகம் முழுவதும் 2500 திரைகளில் இப்படம் திரையிடப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 650 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லாவிட்டால் நஷ்டமும் பெரிதளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக அண்ணாச்சியின் படம் ரிலீஸ் ஆவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.