தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது அங்குள்ள சினிமா துறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டும் இதுவரை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமாவிலேயே நடிகர் விஜய் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். அதனைத் தாண்டி சொந்தமாக சில மண்டபங்கள் அவருக்கு உள்ளன. அதன்படி சென்னை சாலிகிராமத்தில் சோபனா மண்டபம், வடபழனியில் ஒரு மண்டபம்,போரூரில் சங்கீதா மண்டபம் என நிறைய மண்டபங்களை அவர் நடத்தி வருகிறார்.

அதில் சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் எட்டு லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகை விடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.இது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வாடகை விவரமும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது.
