சென்னை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் பலரையும் வியக்க வைக்கும் வகையில் விழா நடைபெற்றது.

அந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி முதலில் நடைபெற்ற மணல் ஓவியத்தில் இருந்து வரிசையாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட நடிகர்கள் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் திருக்குறள் அறிவு மற்றும் பாடகர் தீ பாடிய என்ஜாய் என்ஜாமி பாடல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்தப் பாடல் செஸ் ஒளும்பையால் தொடக்க விழாவில் நேற்று இசைக்கப்பட்டது. அதில் பாடகர் தீ மற்றும் மாரியம்மாள் கலந்து கொண்டு பாடலைப் பாடினார். அந்தப் பாடல் மேடையில் அரங்கேரி மொத்த மேடையையும் அதிர வைத்தது. ஆனால் தெரு குரள் அறிவு மேடையில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.