விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சலி. அவர் விஜய் டிவியில் தேன்மொழி என்ற சீரியலில் நடித்துள்ளார். அவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் பிரபாகரனும் அஞ்சலியும் வாங்காத கடனுக்கு பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்து போன என் தந்தை தவணை முறையில் செல்போன் வாங்கியதாகவும், அதற்கு பணம் செலுத்துமாறு கூறினர், ஆனால் நான் முடியாது என கூறினேன். அதற்கு SIபதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி மற்றும் வக்கீல் ஒருவர் போன் செய்து பணத்தை கட்டுங்கள் இல்லை என்றால் 15 நாட்கள் சிறைச்செல்ல வேண்டி இருக்கும் என மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போது எங்கள் பாலோயர்கள் இது போன்ற சம்பவங்கள் எங்களுக்கும் வருகின்றன என கூறினார்கள். எனவே இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.