திருமணத்தில் அம்மாவுடன் விக்னேஷ் சிவன்…. முதன்முறையாக வெளியான க்யூட் புகைப்படம் இதோ….!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. அதில் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.

திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படங்களாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் ரஜினி மற்றும் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்திற்கு வருகை தந்ததை அவர் பதிவிட்டிருந்தார். அதனைப் போலவே திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்று இருந்த புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியானது.

அவ்வப்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று மிகவும் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது அவர் திருமணத்தின் போது தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.